பங்கு சந்தையில் நஷ்டம்; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், இளையூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 28).இவர் மெக்கானிக் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக திருச்சி, கே. கே. நகர், குறிஞ்சி நகர், முல்லை தெருவில் வசிக்கும் அவருடைய நண்பர் பிரசன்னா என்பவருடன் தங்கி பங்கு சந்தையில் டிரேடராக பணிபுரிந்து வந்தார். பங்கு சந்தையில் அவருக்கு ரூ.5 லட்சம் நஷ்டமானதால் மனம் உடைந்த அவர் தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவருடைய நண்பர் பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story