ஆழ்கடலில் தவறி விழுந்த கேரள மீன்பிடி தொழிலாளி பலி


ஆழ்கடலில் தவறி விழுந்த   கேரள மீன்பிடி தொழிலாளி பலி
x

தேங்காப்பட்டணத்தில் ஆழ்கடலில் தவறி விழுந்த கேரள மீன்பிடி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

தேங்காப்பட்டணத்தில் ஆழ்கடலில் தவறி விழுந்த கேரள மீன்பிடி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மீன்பிடி தொழிலாளி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளித்துறையை சேர்ந்தவர் கில்பர்ட். இவருடைய மகன் மேத்யூ கில்பர்ட் (வயது 39). இவர் குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த யூஜின் என்பவரின் விசைப்படகில் மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 29-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மேத்யூ கில்பர்ட் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றார். உடன் 11 தொழிலாளர்களும் சென்றனர்.

சாவு

2-ந் தேதி இவர்களது படகு தேங்காப்பட்டணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் மேத்யூ கில்பர்ட் கடலில் தவறி விழுந்தார். அதை பார்த்த உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். அதற்குள் மேத்யூ கில்பர்ட் மூச்சு திணறி இறந்து விட்டார்.

ஆழ்கடல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உடனே படகு கரை திரும்ப முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தனர். இது குறித்து அவரது அண்ணன் ரமேஷ் குளச்சல் கடலோர காவல் படை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கடலில் தவறிவிழுந்து பலியான மேத்யூ கில்பர்டுக்கு ஜினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story