லாட்டரி விற்பனை; 2 பேர் கைது


லாட்டரி விற்பனை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 1:55 AM IST (Updated: 9 July 2023 5:09 PM IST)
t-max-icont-min-icon

வல்லத்தில் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூர்

வல்லம்;

வல்லத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று கடைவீதி மற்றும் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பழைய கந்தர்வக்கோட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 27), மற்றொருவர் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த மாதேஷ் (21) என தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் போலீசார்கைது செய்து லாட்டரி சீட்டுகள், ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story