லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பாவூர்சத்திரம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நபர் ஒருவர் நின்று லாட்டரி சீட்டுகள் விற்பதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை பிடித்து நடத்திய விசாரணையில், தென்காசியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நந்தகுமார் (வயது 49) என்பதும், லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி பாவூர்சத்திரம் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் ரூ.1 லட்சத்து 48 மதிப்பிலான 3,615 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் நந்தகுமாரையும் கைது செய்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.