லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

ஆம்பூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது ெசய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த மாதனூர் மஞ்சுநாதன் (வயது 36) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.33 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story