லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகூர் பெரியார் தெருவை சேர்ந்த ஷாகுல் ஹமீது (வயது 43) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாகுல்ஹமீதை கைது செய்தனர்.


Next Story