திருச்செந்தூரில் பஸ்களில் பொருத்தி இருந்த அதிகஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்
திருச்செந்தூரில் பஸ்களில் பொருத்தி இருந்த அதிகஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செண்பகவல்லி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாகனங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அதிக ஒலி எழுப்புவதால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்பு குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story