இருசக்கர வாகனங்களில்அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி இருந்தால் அபராதம்


தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களில்அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

நெல்லை துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி தூத்துக்குடி பகுதியில் இயங்கும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள், அதிக ஒலி எழுப்பும் பலகுரல் ஒலிப்பான்கள், மாற்றி அமைக்கப்பட்ட கேன்டில்பார்கள் மற்றும் தலைக்கவசங்களில் கேமிரா பொருத்து இயக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். இதே போன்று இலகுரக நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கை, பின் இருக்கையில் இருந்து பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும். இது தொடர்பாக வரும் காலங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தெரிவித்து உள்ளார்.


Next Story