கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

காதல் ஜோடி தஞ்சம்

கருங்கல் அருகே உள்ள கப்பியறை செங்கட்டான்விளையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஜெயவித்யா (வயது26). சம்பவத்தன்று ஜெயவித்யா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முருகன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், இளம்பெண் ஜெயவித்யா கப்பியறைைய சேர்ந்த ஸ்ரீதரன் (35) என்பவருடன் நேற்று முன்தினம் கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் போலீசாரிடம் தாங்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு கூறினர். இதையடுத்து இருவரின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் சேர்த்து வைத்து அனுப்பினர்.


Next Story