போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண ராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). இவர் கடந்த 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஆர்த்தி காதல் திருமணம் செய்து கொண்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். விசாரணையில் ஆர்த்தி, திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (25) என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் ஆர்த்தி, தனது காதல் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story