காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்
பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவியை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது 56). இவரது மகள் நிவேதா(23). இவரும், அதே ஊரை சேர்ந்த பாலாஜியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நிவேதா கணவருடன் தனது பெற்றோர் வீட்டிலேயே குடும்பம் நடத்தி வந்தார். இது நந்தகோபாலின் தம்பி செந்தில்குமார் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் புதுமண தம்பதி இருவரும் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்ததைப்பார்த்து ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் மனைவி தனலட்சுமி, இவரது மகன் வசந்தகுமார்(23), மகள் நர்மதா(21) ஆகிய 3 பேரும் சேர்ந்து அவர்களை ஆபாசமாக திட்டி, சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றி எழுதி தருமாறும், இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தகோபால் கொடுத்த புகாரின் பேரில் தனலட்சுமி உள்பட 3 பேர் மீதும் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.