காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
சாத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொைல செய்து கொண்டார்.
காதல் திருமணம்
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). இவரது மகள் காயத்ரி (26). இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மகனுக்கு வலிப்பு நோய் உள்ளதால் பல இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் காயத்ரி சம்பவத்தன்று மனவேதனையில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பெண் சாவு
இதுகுறித்து தகவல்அறிந்த குணசேகரன் விரைந்து வந்து தீக்காயங்களுடன் இருந்த காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் ேசர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தொடர்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.