கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் நவநீதன் (வயது 24). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகள் ரிஷிகா (20). நவநீதன், ரிஷிகா ஆகியோரின் தந்தைகள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இதன் மூலம் நவநீதனுக்கும், ரிஷிகாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நவநீதனும், ரிஷிகாவும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள முனியப்பன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


Next Story