காதல் மனைவி கோபித்து சென்றதால்விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


காதல் மனைவி கோபித்து சென்றதால்விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே காதல் மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவரும், சீப்பாலக்கோட்டையை சேர்ந்த திவ்யா (22) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யா கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் ரமேஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவர் கம்பம்-காமய கவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்று பாலம் அருகே அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story