கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்


கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.

வீட்டை விட்டு வெளியேறி...

சேலம் மாவட்டம் எடப்பாடி தேவூர் பகுதியை சேர்ந்தவர் சென்னிமலை. இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி கோட்டையைச் சேர்ந்தவர் நல்லசிவம். இவருடைய மகள் காயத்ரி ஸ்ரீநிதி (22).

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியும், காயத்ரி ஸ்ரீநிதியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள பாரியூர் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஒரே கல்லூரி

இதேபோல் கோபி அருகே உள்ள நாகர்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் சஞ்சீவ் (24). பி.காம். சி.ஏ. படித்துள்ளார். கோபி அருகே உள்ள கலராமணியை சேர்ந்த அருள்மணி என்பவரின் மகள் சரண்யா (24). பி.காம். படித்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் காதல் ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 2 காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story