குறைந்த மின்அழுத்தம்; பொதுமக்கள் அவதி
சீர்காழி பகுதியில் குறைந்த மின்அழுத்தம்; பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை
திருவெண்காடு:
சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகள், விவசாய பம்பு செட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உபயோகத்திற்காக மின்சார வாரியம் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள், குடிநீர் தொட்டிகள், கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள பல்புகள், குளிர் சாதன பெட்டிகள், ஏ.சி. மற்றும் குடிநீர் மின் மோட்டார்கள் ஆகியவற்றை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான மின்சாரத்தை வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story