சந்திரகிரகணம்: எந்தவித பிடிமானமும் இன்றி தரையில் நின்ற உலக்கை- கிரகணம் முடிந்ததும் கீழே விழுந்தது


சந்திரகிரகணம்: எந்தவித பிடிமானமும் இன்றி தரையில் நின்ற உலக்கை- கிரகணம் முடிந்ததும் கீழே விழுந்தது
x

சந்திரகிரகணம்: எந்தவித பிடிமானமும் இன்றி தரையில் நின்ற உலக்கை- கிரகணம் முடிந்ததும் கீழே விழுந்தது

மதுரை

உசிலம்பட்டி,

இந்த ஆண்டின் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நேற்று 2.40 மணி முதல் 6.40 மணி வரை நடைபெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் மாலை 5.40 மணிக்கு மேல் தான் சந்திர உதயம் என்பதால் 5.40-க்கு பின்பு தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வைரவ கோவில் ஆசாரி தெருவை சேர்ந்த மக்கள் பழமையான வழக்கப்படி தங்கள் வீடுகளில் இருந்த உலக்கையை வாசலில் கொண்டு வந்து நிறுத்தி வைக்க எந்த பிடிமானமும் இன்றி உலக்கை நின்றது. சந்திர கிரகணம் முடிந்த பின் தானாக உலக்கை கீழே விழுந்துவிடும் என்றும் நிற்க வைத்தாலும் நிற்காது எனவும் தெரிவித்தனர். அதன்படி கிரகணம் முடிந்ததும் உலக்கை கீழே விழுந்தது.

பண்டைய காலத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணங்கள் நடைபெறுவதை அறியவும், வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்ற ஐதீகத்தாலும் உலக்கையை வெட்ட வெளியில் நிற்க வைத்து சந்திர, சூரிய கிரகணம் நேரத்தை முன்னோர்கள் அறிந்து வந்தாக கூறப்படுகிறது. காரணம் உலக்கை என்பது பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் நெல், குதிரைவாலி, வரகு போன்ற உணவு தானியங்களை அரிசியாக ஆக்குவதற்கும் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற உணவு தானியங்களை மாவு பொருளாக ஆக்குவதற்கும் உரலில் வைத்து இந்த உலக்கை மூலமாக குத்தி அவைகளை உணவுப் பொருள்களாக மாற்றி வந்தனர். தற்பொழுது உள்ள விஞ்ஞான காலத்தில் உலக்கை, உரல் பயன்படுத்துவது வெகு அரிதாக உள்ளது.

சூரிய கிரகணத்தை அறிந்து கொள்ள விஞ்ஞானம் இல்லாத காலங்களில் வாழ்ந்த மக்கள் உலக்கையை தங்கடைய வீட்டின் வாசல்கள் முன்பு நிறுத்தி வைத்து விட்டு சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பிடிமானம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட உலக்கை தானாக கீழே விழுந்த பின்னர் தான் கிரகணம் முடிந்தது என்பதை அறிந்து கொண்டு வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். எத்தனை புதுமைகள் வந்தாலும் விஞ்ஞானம் இல்லாத காலங்களில் நம்முடைய முன்னோர்கள் கிரகணங்களை அறிந்து கொள்ள வைத்திருந்த பழக்கவழக்கங்கள் இன்று வரை நிலைத்து நிற்பது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story