மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு


மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யனார், ராமலிங்கம், சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு 44 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், பாலமுருகன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story