புனித லூர்து அன்னை ஆலய தேர்த்திருவிழா
புனித லூர்து அன்னை ஆலய தேர்த்திருவிழா
சேவூர்
சேவூர் அருகே லூர்துபுரம் புனித லூர்து அன்னை ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித லூர்து அன்னை ஆலயம்
சேவூர் அருகே புளியம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் லூர்துபுரம் கிராமம் உள்ளது. இங்கு புனித லூர்து அன்னையின் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் என்றும் வற்றாத நீருற்று (கிணறு) உள்ளது. அதனால் இத்திருத்தலத்தை புனித நீருற்று லூர்து அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தேர் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா நேற்றமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 8 மணிக்கு கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை ஜோ.பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி முடிந்து அன்னையின் திருக்கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு, காரமடை பங்கு தந்தை சிஜூ தலைமையில், செபமாலை, திருப்பலி, நவநாள், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து தினசரி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறும்.
தேர்பவனி
வருகிற 11-ந் தேதி மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில், காலை 10 மணிக்கு துதிஆராதனை, காலை 11 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடல், திருப்பலி, நடைபெறும். இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆடம்பரதேர்பவனி,
இரவு10மணிக்கு இந்த திருத்தலத்தில் நடந்த புதுமைகளை மையமாக கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 12-ந் தேதி காலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி மோகன் மரிய திவ்ய ராஜின் திருப்பலி, காலை 8 மணிக்கு கோவை ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருப்பலியும், காலை 11 மணி, கோவை மேய்ப்புப்பணி நிலைய அந்தோணி செல்வராஜின் சிறப்பு செபமாலை திருப்பலி, நவநாள் வேண்டுதல் தேர், மாலை 6 மணிக்கு, சிறுமுகை பங்குத்தந்தை லூர்து இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை, திருப்பலியும், அதைத்தொடர்ந்து லூர்துபுரம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கார தேர் பவனியும் நடைபெறும். தேர் திருவிழாவையொட்டி, 11-ந் -தேதி இரவும், மற்றும் 12-ந் தேதி காலை அன்பின் விருந்து நடைபெறும்.
-----------