சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சொகுசு வாகன சேவை


சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சொகுசு வாகன சேவை
x
சேலம்

சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் ஏற்காடு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக ஏற்காடு சூழலியல் சுற்றுலா என்ற சொகுசு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 7.30 மணியளவில் சுற்றுலா வாகனம் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்றடையும்.

ஏற்காடு ஏரி, சேர்வராயன் காட்சிமுனை, இந்திய தாவரவியல் ஆய்வகம், பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், பட்டுப்புழு வளர்ப்புத்துறை, ரோஜா தோட்டம் மற்றும் அண்ணா பூங்கா ஆகிய சுற்றுலாபகுதிகளுக்கு நுழைவுக் கட்டணத்துடன், பயணிகளுக்கு கட்டணமாக (குளிர்சாதன வசதியில்லாமல்) ரூ.860-ம் (காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள்) உள்பட குளிர்சாதன வசதியுடன் ரூ.960-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித பயணக் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் எனவும், அன்று மாலை 6 மணியளவில் ஏற்காட்டில் இருந்து புறப்பட்டு, சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு சொகுசு வாகனம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு வாகனச் சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story