ஓடை அருகே கிடந்த காலி போதை மருந்து பாட்டில்கள்:போலீசார் விசாரணை
தேனி
போடி வஞ்சி ஓடை அருகே காலியான போதை மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகள் கிடப்பதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது காலியான போதை மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகள் கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இந்த பாட்டில்கள் மற்றும் ஊசிகள் எப்படி வந்தது, யாரும் போதை மருந்தை பயன்படுத்தி விட்டு இங்ேக போட்டு சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு போடி பகுதியில் போதை மருந்து விற்ற 3 பேர் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story