இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கியவாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வந்த 24 வயது இளம் பெண்ணிற்கும், விளாத்திகுளம் மாவிலோடை வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அருண்குமாருக்கும்(வயது 22) கடந்த 8 மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதில் அருண்குமார் திருமணம் செய்வதாக கூறி அந்த இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்தாராம். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.


Next Story