மெட்ரைட் நிறுவன புதிய அலுவலகம்
நெல்லையில் மெட்ரைட் நிறுவன புதிய அலுவலகம்- பூங்கோதை ஆலடி அருணா திறந்து வைத்தார்
திருநெல்வேலி
நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் மெட்ரைட் நிறுவன கிளை அலுவலகம் நெல்லையில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் விதத்தில் நெல்லை சாந்தி நகரில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலக மாடியில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் தலைமை தாங்கினார். டாக்டர்கள் வள்ளுவன் சங்கரலிங்கம், சி.பி.சுரேஷ், எஸ்.வி.ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
நெல்லை தொழிலதிபர் எஸ்.கே.எம்.சிவகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களுக்கு மெட்ரைட் நிறுவன தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் நினைவு பரிசு வழங்கினார். நிறுவன இயக்குனர் டாக்டர் பிரியா சுஜின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story