மதுரை அ.தி.மு.க. மாநாடு:வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி


மதுரை அ.தி.மு.க. மாநாடு:வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை முன்னிட்டு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக, மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மதுரை மாநாடு ஸ்டிக்கர்களை ஆட்டோ, கார்கள், வேன்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினர்.


Next Story