மாநில அளவில் கைப்பந்து போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி


மாநில அளவில் கைப்பந்து போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி
x

மாநில அளவில் கைப்பந்து போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி பெற்றது

மதுரை


தமிழ்நாடு கைப்பந்து சங்கம், மதுரை கைப்பந்து சங்கம், மதர் குளோபல் அகாடமி சார்பில் 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி மதுரை திருநகர் கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கோவை, சேலம், விருதுநகர், தேனி, ராம்நாடு, சிவகங்கை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, கோவை கற்பகம் கல்லூரி அணி மோதின. அதில் 24-20 என்ற புள்ளி கணக்கில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கைப்பந்து ஆலோசகர் சோலைஇளவரசன், கவுன்சிலர் இந்திராகாந்தி, நாகராஜன் சுந்தரம், ரமேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை குளோபல் அகாடமி செயலர் அன்பரசன், குமார், அருண், மதுரை மாவட்ட பயிற்சியாளர் குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story