மதுரை-போடி இடையே ரெயில் சேவை தொடக்கம்:ரெயில் நிலையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு


மதுரை-போடி இடையே ரெயில் சேவை தொடக்கம்:ரெயில் நிலையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போடி ரெயில் நிலையத்தில் ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு செய்தார்.

தேனி

போடி-மதுரை அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் போடி-மதுரை, போடி-சென்னை இடையே வருகிற 15-ந்தேதி முதல் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்த ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் போடி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

அப்போது ரெயில் பாதை அமைப்பு, ரெயில்கள் நிற்குமிடம், என்ஜின்கள் சென்று திரும்பும் இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் ரெயில் நிலைய அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். மேலும் சிக்னல்கள் செயல்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், போடி ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். போடியில் இருந்து சென்னை, மதுரைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story