மதுரை விரைவு ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்


மதுரை விரைவு ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விரைவு ரெயிைல வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்


மதுரை விரைவு ரெயிைல வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆய்வு

தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நாகை, நாகூர் ரெயில் நிலையங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் ரெயில் நிலைய வளாகம், நடைமேடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்துக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது நாகூர்-நாகப்பட்டினம் ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மோகன், செயலாளர் நாகூர் சித்திக் ஆகியோர் கோட்ட மேலாளர் அன்பழகனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நீட்டிக்க வேண்டும்

தென் மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் ஈரோடு-திருச்சி-ஈரோடு ரெயிலை (எண்.06612/06611) காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-புனலூர்-மதுரை விரைவு ரெயிலை காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி-சென்னை-வேளாங்கண்ணி லிங்க் ரெயிலை ரத்து செய்ததால், வேளாங்கண்ணி-தாம்பரம் இடையே தினசரி பகலில் அதி விரைவு ரெயில் இயக்க வேண்டும்.

வேளாங்கண்ணி-நாகை-வேளாங்கண்ணி இடையே 10 கி.மீ. இயக்கும் டெமு ரெயிலை திருச்சி வரை விரைவு ரெயிலாக இயக்கிட வேண்டும். மதியத்தில் காரைக்கால்-தஞ்சை-காரைக்கால் பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க உறுதி

நாகூரில் கோச் இண்டிகேசன் போர்டு, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும். மேலும் நிலையம் தென்பகுதி சுவர் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆய்வின்போது திருச்சி கோட்ட முதுநிலை இயக்குதல் மேலாளர் ஹரிக்குமார், முதுநிலை திருச்சி கோட்ட வர்த்தக மேலாளர் செந்தில் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story