உயர்கல்வி படிக்க இளநிலை சான்றுகளை வழங்க வேண்டும் - மருத்துவ கல்வி இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


உயர்கல்வி படிக்க இளநிலை சான்றுகளை வழங்க வேண்டும் - மருத்துவ கல்வி இயக்குனருக்கு மதுரை ஐகோர்ட்டு  உத்தரவு
x

உயர்கல்வி படிக்க இளநிலை மருத்துவ சான்றுகளை வழங்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்

மதுரை,

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் , உயர்கல்வி மருத்துவ கல்வி பயிலுவதற்கு தங்களுடைய மருத்துவ கல்வி சான்றிதழை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தர விடவேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று விசாரித்தார்.அதில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர். இதனால் உயர்கல்வி படிக்க இளநிலை மருத்துவ சான்றுகளை வழங்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்


Next Story