மதுரை மல்லிகை விலை தொடர் சரிவு


மதுரை மல்லிகை விலை தொடர் சரிவு
x

வரத்து அதிகரிப்பதால் மதுரை மல்லிகை விலை தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.400-க்கு விற்பனையானது.

மதுரை

மதுரை,

வரத்து அதிகரிப்பதால் மதுரை மல்லிகை விலை தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.400-க்கு விற்பனையானது.

மல்லிகை விலை குறைவு

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக டன் கணக்கில் கொண்டுவரப்படுகிறது. தற்போது, மதுரை மார்க்கெட்டுக்கு அதிக அளவில் பூக்கள் வருகின்றன. இதனால், அதன் விலை கடந்த சில தினங்களாக குறைவாகவே இருக்கிறது.

அதன்படி, நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க் கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.400-க்கு விற்பனையானது. அதுபோல், பிச்சி ரூ.300, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.200, பட்டன்ரோஸ் ரூ.100, சம்பங்கி ரூ.100, செவ்வந்தி ரூ.200 என விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது.

மழை பெய்தால்...

மல்லிகை பூக்களுக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால், அதிக அளவில் செண்ட் பேக்டரிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தினர் ஒரு கிலோ மல்லிகைப்பூவை ரூ.300 கொடுத்து கொள்முதல் செய்து கொள் வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது மழை தொடங்கி இருப்பதால் வரும் நாட்களில் பூக்களின் விலை அதிகரிக்கும் என்றனர்.


Related Tags :
Next Story