சூரிய கிரகணத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு
சூரிய கிரகணத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்படுகிறது
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக சார்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:-வருகிற 25-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று சூரிய கிரகணம் மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்.அந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தன்று மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும். அதன் பின் அபிஷேகம் முடிவடைந்து சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்குப்பின் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.