மதுரை-தூத்துக்குடி அகல ெரயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது
மதுரை- தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
மதுரை- தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
மேம்பாட்டு பணி
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இந்தநிகழ்ச்சியில் பேசிய அவர் திட்டப்பணிகளை பற்றி பேசுவதை விட எதிர்கட்சிகளை பற்றி குற்றம் காட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தார்.
ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு தற்போது ரூ. 7 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்ட பணிகளை பற்றி தங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக விருதுநகர் ெரயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
அகல ெரயில்பாதை
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப் பணியை மத்திய ெரயில்வே அமைச்சகம் கைவிட முடிவு செய்துவிட்டது. இது பற்றி கோட்ட ெரயில்வே அதிகாரியிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என கூறுகின்றார்.
எனவே இதுகுறித்து தென் மாவட்ட எம்.பி.க்கள் அனைவரும் மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து இத்திட்டத்தை கைவிடக் கூடாது என்றும் தொடர்ந்து மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முறையிடுவோம். அத்துடன் எழுத்துப்பூர்வமாகவும் மனு கொடுக்க உள்ளோம்.
நடைபயணம்
ராகுல்காந்தி நாடாளு மன்ற விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். எனினும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.