மதுரை பெண் இன்ஸ்பெக்டர் `டிஸ்மிஸ்'


மதுரை பெண் இன்ஸ்பெக்டர் `டிஸ்மிஸ்
x

மதுரை பெண் இன்ஸ்பெக்டர் `டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.

மதுரை

மதுரை மாவட்ட காவல்துறை பயிற்சி பள்ளியில் பெண் இன்ஸ்பெக்டராக இருந்தவர், சொர்ணலதா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தார். அப்போது வேறு ஒருவரின் சொத்துக்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பவர்பத்திரம் மூலம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து நடந்த விசாரணைக்கு பின்னர், சொர்ணலதா பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். மேற்கண்ட புகார் தொடர்பாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சொர்ணலதாவை பணியில் இருந்து நீக்கி டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டார்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. பொன்னி கூறுகையில், "இது, துறை சார்ந்த நடவடிக்கைதான். பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்கள் இருந்தநிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியும், சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story