பிரத்யங்கிரா தேவிக்கு மகா சண்டி யாகம்


பிரத்யங்கிரா தேவிக்கு மகா சண்டி யாகம்
x

கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பிரத்யங்கிரா தேவிக்கு மகா சண்டி யாகம்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகளான மா, பலா, வாழையை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், கரும்பு, தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, மாதுளை பழங்களையும், சேலைகளையும் பக்தர்கள் யாகத்தில் இட்டனர். கார்த்திகை அமாவாசையையொட்டி அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.


Next Story