குமராட்சி அருகே மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குமராட்சி அருகே  மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

குமராட்சி அருகே மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே வடக்கு கொளக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர், மகா காளியம்மன், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் ஆகிய கோவில்கள் உள்ளன. பழமை வாய்ந்த இந்த கோவில்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று 2, 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜையும், புனிதநீர் கடம் புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி விநாயகர், மகா காளியம்மன், சுப்பிரமணியர், சப்தகன்னிகள் கோவில் கோபுர விமானங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story