பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்


பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
x

திருவண்ணாமலையில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை -போளூர் சாலையில் தீபமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

இதனை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி முதல் நேற்று வரை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை, மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், திசாஹோமம், மூர்த்தி ஹோமம், அக்னி சங்கிரஹணம், யாத்ராஹோமம், யாத்ராதானம், முதல்காலயாகபூஜை, 2-ம் கால யாக பூஜை, ஷன்னவதிஹோமம், 3-ம் கால யாக பூஜை, தைலாபிஷேகம், தர்வார்ச்சனை மற்றும் காலை, மாலையில் வேதபாராயணம், தமிழ் திருமுறை பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது.

தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 4-ம் கால யாக பூஜை, மபாபூர்ணாஹூதி நடந்தது. பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், பச்சையம்மன், மன்னார்சாமி, விமான ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் பக்தர்கள் மீது புனி நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பச்சையம்மன், மன்னார்சாமி மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்துக்கு கோவில் தலைவர் வக்கீல் நா.பழனி (பொறுப்பு) தலைமை தாங்கினார். வக்கீல் நா.ப.கார்த்திகேயன் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தை காண திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமில்லாது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்களும், வெளியூர் பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவில் சாமி வீதி உலா நடந்தது.

இன்று (சனிக்கிழமை) முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஈஸ்வரமூர்த்தி, முதன்மை சார்பு நீதிபதி பழனிவேல், தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்,

எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, இரா.கிரிராஜன், மாவட்ட அறங்காவலர் நியமனகுழு தலைவர் கே.வி.சேகரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அ.தி.மு.க. நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.இளஞ்செழியன், வியாபாரிகள் சங்க தலைவர் மண்ணுலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story