மகா மாரியம்மன் கோவில் திருவிழா
மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
தோகைமலை,
தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி ராக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி கடந்த வாரம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி தரைப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்தது. பின்னர் கோவிலில் கரகம் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பறவை காவடி, ஏரோபிளேன் காவடி மற்றும் பல்வேறு வேடமணிந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் மஞ்சள் நீராட்டும், கரகம் எடுத்து விடும் நிகழ்ச்சியும் நடந்து திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், விழாக்குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.