மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சென்னசமுத்திரம் கிராமத்தில் மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கலவை

கலவையை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள மாகாளி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகோபுரம், விநாயகர், லட்சுமி, நவகிரகம், மாகாளி அம்மன் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி பூஜை, வாஸ்து பூஜை ஆகிய நான்கு கால பூஜைகள் நடைபெற்று நேற்று காலை 10 மணி அளவில் ராஜகோபுரம், முருகர், விநாயகர், நவகிரகம், மகாகாளி அம்மன் மூலவர் ஆகியோருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதனையொட்டி மோர், தயிர், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் அம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளத்துடன் வீதி உலாவந்து அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கிராம நாட்டாமைகள், தர்மகர்த்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story