காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா


காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா
x

காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது

கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு தினமும் நடைபெற்றுவருகிறது.

கடந்த திங்கள்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து துவாஜா ரோகனம், கொடியேற்றத்துடன், அலகு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி முதல் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற உள்ளது.

22-ந் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா ஆகியவையும், மறுநாள் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காளசமுத்திரம் ஊராட்சி கிராம பொதுமக்கள் சார்பில், கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story