30 அடி உயர கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது
திருப்பத்தூர் கோட்டை பிரம்மேஸ்வரர் கோவிலில் 30 அடி உயர கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருப்பத்தூர்
கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பத்தூர் கோட்டை பிரம்மேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதனையொட்டி பிரம்மேஸ்வரர் வெள்ளிக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூலஸ்தானத்தில் விளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பின்னர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலை வலம் வந்து 30 அடி உயர இரும்பு கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு இருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய' என கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதே போன்று 200 ஆண்டு பழமை வாய்ந்த மடவாளம் அங்கநாத ஈஸ்வரர், முத்துக்குமாரசாமி கோவில், கொரட்டி ஈஸ்வரன் கோவில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story