பலத்த சூறைக்காற்றிலும் சுடர் விட்டு எரிந்த மகாதீபம்


பலத்த சூறைக்காற்றிலும் சுடர் விட்டு எரிந்த மகாதீபம்
x

2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் பலத்த சூறைக்காற்றிலும் மகாதீபம் சுடர் விட்டு எரிந்தது.

திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது.

இந்த காற்றிலும் 2668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story