மகாலட்சுமி கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு


மகாலட்சுமி கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 5:21 PM IST)
t-max-icont-min-icon

ஆனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று, பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

பெரியகுளம்,

ஆனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று, பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி ஸ்ரீ சித்தி புத்தி விநாயகருக்கு புண்ணியாக வாஜனம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விநாயருக்கு மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னர் திருமஞ்சன பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 15 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு நட்சத்திர தீபம், லட்சதீபம், கும்ப தீபம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story