பாலமேட்டில் மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பாலமேட்டில் மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துகமிட்டி மகாலிங்க சுவாமி கோவில் மற்றும் ஜீவ சமாதி மடத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டு இருந்த காசி, ராமேசுவரம், அழகர் மலை, வைகை, சுருளி உள்ளிட்ட பல்வேறு புனித தீர்த்த குடங்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் மூலவர் கோபுரம், ராஜ கோபுரத்திலும் உள்ள கலசங்களில் குடம் குடமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., பாலமேடு அனைத்து சமுதாய உறவின்முறை தலைவர்கள், அரசு அதிகாரிகள், மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி, உறுப்பினர்கள் சங்கரலிங்கம், கிருஷ்ணன், ஜெயராமன், குமரேசன், சுரேஷ், ராஜமாணிக்கம், சந்திரன், முத்து செல்வம் ஆகியோர் உள்பட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.