மகாலிங்கசுவாமி கோவில் குடமுழுக்கு
தலைஞாயிறு அருகே மகாலிங்கசுவாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் திருவிடைமருதூர் ஊராட்சியில் 800 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 15-ந் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்று, நேற்று காலை கடம்புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. . பின்னர் மூலவர் மகாலிங்க சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story