மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை

குத்தாலம், மார்ச்.28-

குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சி ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த பூச்சொரித்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் நாள் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சக்தி கரகத்துடன் காவடி எடுத்து அலகு குத்தி கோவிலை அடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story