மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

டி.மணல்மேட்டில் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்

டி.மணல்மேட்டில் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.

தீ மிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே உள்ள டி.மணல்மேடு கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் மார்கண்டேயர் கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு, வான வேடிக்கை, மேளதாளம் முழங்க மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்

தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை டி.மணல்மேடு கிராமத்தினர் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story