மகேந்திரவாடி ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர்


மகேந்திரவாடி ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர்
x

மகேந்திரவாடி ஏரி நிரம்பியதால் வெளியேறும் தண்ணீர் வெளியேறுகிறது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

மகேந்திரவாடி ஏரி நிரம்பியதுதால் வெளியேறும் தண்ணீர் வெளியேறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே மகேந்திரவாடியில் ஏரி உள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரியை அப்போதைய மன்னர் மகேந்திரவா்மன் கட்டினார்.

இந்த ஏரியானது ராணிப்பேட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும். இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நீா்வரத்து அதிகரித்ததால் ஏரி நேற்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி கடைவாசல் வழியாக வெளியேறியது.

நெமிலி- பாணாவரம் சாலையில் மகேந்திரவாடி மதுகாத்தம்மன் ஆலயம் அருகே உள்ள தரைபாலத்தில் அதிக அளவு தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதுகாப்பு கருதி பாணாவரம்-மகேந்திரவாடி இடையே தரைபாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதித்து சாலையின் இரண்டு பகுதிகளிலும் கயிறு கட்டினர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகியுள்ளனர்.

இப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுபோன்ற காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.


Next Story