2-ம் நிலை காவலர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வை 10,314 பேர் எழுதினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்விற்கு 12 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, கரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிஷ்யா மெட்ரிக் பள்ளி உள்பட 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வு கண்காணிப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களை ஏ.டி.ஜி.பி. ஜெயராம், தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணைய உறுப்பினர் சாந்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.
இந்த தேர்வில் 10,314 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார். 1,964 பேர் தேர்வு எழுத வரவில்லை.