பராமரிப்பு பணி: இன்று, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்


பராமரிப்பு பணி: இன்று, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை நகர் பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை நகர் பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

மதுரை மேற்கு கோட்டம் ஆனையூர் துணைமின் நிலையத்தில் சாந்தி நகர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செம்பருத்தி நகர், வெங்கடாஜபதி நகர், சக்தி நகர் வாழவந்தான் தெரு, துளசி வீதி ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

நாளை

அதேபோல அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமிநகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர், பாப்பாகுடி, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்கடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் டிரெய்னிங் கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story