ரூ.1.34 கோடி செலவில் ஜம்பேரியில் பராமரிப்பு பணிகள்


ரூ.1.34 கோடி செலவில் ஜம்பேரியில் பராமரிப்பு பணிகள்
x

ரூ.1.34 கோடி செலவில் ஜம்பேரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருச்சி

உப்பிலியபுரம், ஜூலை.30-

உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம் இடையே உள்ள ஜம்பேரியில், பராமரிப்பு பணிகள் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஜம்பேரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் .ஜம்பேரி கிழக்குப்பகுதி கரைகளில் கான்கிரீட்பிளாக்குகள் பதித்தல், 2.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரையை பலப்படுத்துதல், 7 நீர்வரத்து வாய்கால்களை தூர் வாருதல், 70 கஜம் தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


Related Tags :
Next Story