மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ராமநத்தம் பகுதி விவசாயிகள் கோரிக்கை


மழையால் சேதமடைந்த    மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்    ராமநத்தம் பகுதி விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் பகுதியில் மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

ராமநத்தம்,

மக்காச்சோளம் சாகுபடி

ராமநத்தம் அருகே தொழுதூர், வைத்தியநாதபுரம், ஆலத்தூர், சித்தூர், புலிகரம்பலூர், கண்டமத்தான், மேல்கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, நாங்கூர், தச்சூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமநத்தம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் கனமழை பெய்தது. இந்த மழையால் மக்காச்சோள பயிர்கள் சேதடைந்து சாய்ந்தன.

நிவாரணம் வழங்கவேண்டும்

பெரும் செலவு செய்து பராமரித்து வந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்து ள்ளதால் ராமநத்தம் பகுதி விவசாயிகள் கண்ணீர் வடித்து வருவதோடு, மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை குழு நியமித்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story